Friday, March 08, 2013

மரம் சொன்ன சாட்சி



ஆறிலிருந்து ஆயுள் வரை
Image courtesy  TT Balaji
2.
அன்னை மடியாய் அலைந்து கிடந்த
மரம் சாட்சி, மனம் தருவாயா?
அவன் கேட்க, அவள் தந்தாள் 

காதல் தருவேன் காலமெல்லாம்
கரம் சேர்க்க  கரம் தருவாயா ?
அவன் பற்ற அவள் தந்தாள்

இலைகளால் கரவொலித்து
பூக்களாய்ப் புன்னைகைதேன்

3.
முத்தம் விளைத்த வேள்வி இது
முயக்கம் மணக்கும் வெப்பம் இது
தென்றலாய்த் துவட்டுவேன்
என் கிளைகளால் போர்த்துவேன்
உங்கள் முத்தம் பட்ட சிறு விதை மீட்டு
காதலுக்குச்  சாட்சியாய் காலமெல்லாங்  காத்திடுவேன்


5.
மூச்சுக் காற்றை இவனுக்கு மிச்சம் தந்து
முன்னே தான் சென்றாயோ?

புதைக்கவில்லை பெண்ணே உன்னை இவன்,
பெட்டகத்தில் போக்கிஷித்து
நித்தமுன் நினைவுகளால் அர்சித்தே அலங்கரித்தான்


6.
மீண்டும் சேர்ந்திட்டான் உன்னோடு;
மீண்டு சேர்ந்திட்டான் உன்னோடு
தாளாத் துரயத்தில் நான்  மட்டும் தளர்ந்திட்டேன்

நீங்கள் ,
பிழைத்தேழுந்தால், கிளைத்தெழுந்தால்
உங்கள் முத்தம் பட்ட விதையொன்று வைத்துள்ளேன்
அதை விதைத்திடுங்கள்; காதலாய் எழுவேன் நானும்